சாதி பார்த்து சீட்டு கொடுக்கிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
தமிழ் இனம் சாராத எத்தனையோ அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ள தமிழ் குடி மக்களுக்கு யாரவது இடம் கொடுத்து இருக்கிறீர்களா?
நிராகரிக்கப்பட்ட இதுவரை தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத சமூகத்தினரை தேடித் தேடி நான் வாய்ப்பு கொடுக்கின்றேன் . அதற்கு சாதியை கேட்டுத்தான் ஆக வேண்டும்.
மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் குறை என்ன என்று கேட்காமல் வியாதியை நீக்க முடியுமா? அதுபோல நான் நோயுற்ற சமுதாயதிற்கு மருத்துவம் பார்ப்பவன்.
மருத்துவர் கேட்பது தேக நலனுக்கா? நான் கேட்பது தேச நலனுக்காக என்றார்
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.