தமிழ்நாட்டில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
'10,11,12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும். பொது தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.' என தெரிவித்துள்ளார்.
மேலும் 7.5% வந்த பின்னர்தான் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என ஆளுநர் கூறியுள்ளாரே?
அமைச்சர் அன்பில் மகேஸ்; “ஆரம்பத்தில் இருந்தே அதனை நியாயப்படுத்தும் விதத்தில் தான் கூறுகிறார்கள் என்றார்.
தொடர்ந்து, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்; அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம், இருமொழி கொள்கைதான் நமது கொள்கை, அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.