Breaking News :

Monday, October 14
.

கல்யாணமான ஆண்கள் மட்டும் படிக்கவும்!


வரும் ஜீன் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

கவனமாக கையாளுங்கள்... 

 

விடுமுறை முடிகிறது......

வெளியூர் சென்ற மனைவி குழந்தைகளுடன் வீடு திரும்பும் முன் கணவனாகிய நீங்கள் கவனிக்க வேண்டிய செக்_லிஸ்ட்...  

 

1) வாட்ஸ்-அப் / ஃபேஸ்புக் சேட் கான்வர்ஷேசன் உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.

 

2) கம்ப்யூட்டரில் பிரவுசர் ஹிஸ்டரி க்ளியர் செய்ய வேண்டும்.

 

3) செல்போன் கால் லாக் டெலிட் செய்ய வேண்டும்

 

4) மனைவிக்கு தெரியாமல் புகை, மது பழக்கம் இருப்பின் வீட்டில் உள்ள சிகரெட் துண்டுகள், ஓப்பனர், பீர் பாட்டில் / மூடி எல்லாம் தூக்கி எறிதல் வேண்டும்.

 

5) மனைவி வீட்டில் இல்லாததால் அனைத்து நேரங்களிலும் போனில் கடலை வறுத்த தன் கேர்ள் பிரண்ட்களுக்கு மனைவி வரும் நேரத்தை சொல்லி உஷார்படுத்த வேண்டும்

 

6) இரண்டு, மூன்று வீட்டு வேலைகளை செய்து அதிகம் சிரமப்பட்டது போல் காட்டி கொள்ள வேண்டும்.

 

7) மனைவி வருவதற்கு முன்பே சென்று பஸ் நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ காத்திருந்து பிக்-அப் செய்ய வேண்டும்

 

8) மனைவி கொண்டு வரும் லக்கேஜ்களை போர்ட்டர் போல் சுமந்து வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டும்.

 

9) 'நீங்க இல்லாம சார் ரொம்ப தவிச்சி போயிட்டார்' என்று சொல்ல பக்கத்து வீட்டு ஆண்டியிடமோ அல்லது காய்கறி கொண்டு வரும் அம்மாவிடமோ நல்ல பெயரை வாங்கியிருக்க வேண்டும்.

 

இதுவும் பத்தாது எனில்....

 

1.ஸிங்கில் பாத்திரங்களை போட்டு வைத்திருந்தால் கழுவி வைக்கனும்.

 

2. அடுப்படியை துடைத்து வைக்கணும். மாடு கன்னு போட்ட இடம் மாதிரி இருக்கக் கூடாது. 

 

3.வீட்டை கூட்டி மூலையில் பத்து பதினைந்து நாளாக சேர்த்து வைத்த குப்பைகளை அப்புறப் படுத்தணும். 

 

4. பத்து நாளாக மடிக்காத போர்வையை மடிக்கணும். பெட்சீட்டை விரித்து பெட்டின் மீது ப்ரெஸ்ஸாக விரிக்கணும்.

 

5. வந்ததும் காபி போட பால் இருக்கான்னு பார்க்கணும்.

 

5A. பிரிஜ்ஜை செக் பண்ணனும். இரண்டு மூணு நாளைக்கு வைத்து கொள்ளுங்கள் என மனைவி சொல்லிச் சென்ற பதார்த்தங்கள் அப்படியே இருக்கும். அவற்றை காலி பண்ணி கழுவி வைக்கணும்

 

6. முகத்தை பாவப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளணும். சந்தோஷமா இருக்கிறது தெரியப்படாது...

 

7. வந்து நுழைந்ததும் ஸ்கேனிங் நடக்கும். எதிரி நாட்டு எல்லையில் நுழையும் ஒற்றன் மாதிரி முகபாவத்தை வைத்துக் கொள்ளணும்.

 

*Happy school opening Day*.

 

பின் குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்ச அட்வைஸ் கேட்டுட்டு  நல்லா இருக்கறதும் கேட்காம அடி வாங்கறதும் உங்க இஷ்டம்..

 

Once again all the best.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.