சவுதி அரேபியாவில் வழங்கப்படும் எல்லா தண்டனைகளும் திருக்குர்ஆனில் இருக்கும் ஷரியாவை மையம் கொண்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள். பின்னர் நீதிபதி உடனடியாக தீர்ப்பு சொல்லி விடுவார்கள். குற்றத்திற்கு ஏற்றபடி தண்டனைகள் தாமதமின்றி வழங்கப்படும்.
சவுதியில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும். உலக நாடுகளை கட்டுப்படுத்தும் மனித உரிமை ஆணையம் சவுதியில் எதுவும் செய்ய முடியாது. இங்கு சவுதி அரசு சொல்வதுதான் சட்டம். அதை மீறி எவராலும் ஏதும் செய்ய இயலாது. இந்த காட்சியில் குற்றவாளிகளின் தலைகள் துண்டாக்கி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சவுதியில் வழங்கப்படும் ஒரு சில முக்கியமான தண்டனைகள்:
திருட்டு: சவுதி அரேபியாவில் யாராவது திருட முயன்றால் அவர்களது வலது கையை வெட்டி எடுத்து விடுவார்கள். சவுதி சட்டத்தின்படி திருட்டு என்றால் ஒருவரின் அறியாமையை பயன்படுத்தி கொண்டு தனக்கு சொந்தமில்லாத ஒரு பொருள் அல்லது பணம் மீது ஆசை கொண்டு அதை அவர்களுக்கு தெரியாமல் ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் செயல் திருட்டாகும்
எடுத்துக்காட்டுக்கு சில்லறை கொடுக்காமல் ஏமாற்றுவது, பண கணக்கியலில் ஏற்றத்தாழ்வு செய்வது, ஏதேனும் பொருளை தவறுதலாக எடுத்துக்கொள்வது போன்றவை திருட்டு என்று சொல்லப்படும். அனஸ்தீசியா கொடுத்த பின்புதான் சவுதியில் ஒருவரின் கையை வெட்டுவார்கள்.
கொள்ளையடிப்பது: சவுதியில் யாரேனும் கொள்ளை அடிக்க முயன்றால் அவர்களின் இரண்டு கை மற்றும் கால்களை வெட்டி எடுத்துவிடுவார்கள். சவுதி சட்டத்தின்படி கொள்ளை அடிப்பது என்றால் தனக்கு சொந்தமில்லாத பணம் அல்லது பொருளை திட்டம் போட்டு திருடுவது.
யாரேனும் தெரியாமல் மதுபானம் சிகரெட் போன்றவையே நாடு கடத்தினால் அவர்களுக்கு 400 சவுக்கடிகள் மற்றும் நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும், தெரிந்து கொண்டு வந்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
தேசப்பற்று : அதாவது தன் நாட்டைப் பற்றி தவறாக பேசுவது அல்லது கீழ்தரமாக பேசுவது , தேசப்பற்று இல்லாமல் இருப்பது போன்றவை இதில் அடங்கும். இப்படி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
சவுதியில் மரண தண்டனை என்பது மக்கள் முன்பு குற்றவாளிகளின் தலைகளை துண்டிப்பது ஆகும்
சவுதியில் ஒருவர் பாலியலைப் பற்றி சமுக இடத்தில் பேசுவது சட்டவிரோதமானது அப்படி பேசினால் அவர்களுக்கு 500 சவுக்கடிகள் வழங்கப்படும். தெரியாத நபர்களுக்கு சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் அனுப்பக்கூடாது அப்படி ஒருவர் ஏதேனும் செய்தால் அவருக்கு 450 சவுக்கடிகள் வழங்கப்படும்.
இஸ்லாம் மதத்தை பற்றி சவுதி மக்கள் யாரும் விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால் அவர்களுக்கு உடனடியாக ஆயிரம் சவுக்கடிகள் வழங்கப்படும். ஓரினசேர்க்கை சவுதியில் முற்றிலும் சட்டவிரோதமான ஒன்று. அப்படி யாரேனும் அதில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
சவுதியில் திருமணமான பெண்ணிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் திருமணமாகதவருக்கு 100 சவுக்கடி மற்றும் திருமணமான நபரை(ஆண்/பெண்) ஓடவிட்டு கல்லால் அடித்து கொன்று விடுவார்கள் (பொதுமக்கள் கைகளில் கற்களை கொடுத்து அந்த நபரை ஓடவிட்டு அடித்து கொல்வார்கள்). இங்கு இருவரும் தவறுகள் செய்திருப்பதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்படும்
சவுதியில் பேச்சுரிமை கிடையாது யாரேனும் சவுதி அரசை விமர்சித்தால் அல்லது எதிர்த்துப் பேசினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
இவர்தான் சவுதியின் தலைசிறந்த தண்டனை நிறைவேற்றுபவர். இவர் அவரது பணியில் 15 ஆண்டுகளாக தண்டனைகளை நிறைவேற்றி வருகிறார் மற்றும் அவர் மூத்த மகனுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார். இதுவரை பல குற்றவாளிகளின் தலைகளை துண்டித்து இருக்கிறார் இப்பொழுது கூட இந்த தொலைக்காட்சி பேட்டிக்கு வரும் முன்பு ஒருவரின் தலையை துண்டித்து தான் வந்தார்.
நம் இந்திய நாடு எவ்வளவு சுதந்திரம் நமக்கு கொடுத்து இருக்கிறது என்பதை எல்லாரும் உணரவேண்டும். அந்த சுதந்திரத்தை எல்லாரும் நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழ் வாழ்க, வாழ்க இந்தியா