அதிமுகவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் ஒரு திருமண விழாவில் பேசிய சசிகலா, அதிமுகவில் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது.
இந்த நிலையில் அதிமுகவில் நிலவி வரும் சூழல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா பேசியதாவது:- இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும். அப்படி இருக்கையில் இது எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.