மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ்கார்டன் வேதா இல்லம் எதிரே கட்டிய புதுவீட்டில் சசிகலா பால் காய்ச்சி குடியேறி உள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ10 கோடி. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்திருந்தது அமலாக்கத்துறை,
அதற்கு விதித்த அபராத தொகை ரூ480 கோடியாம்.
அந்த ரூ480 கோடி அபராதத் தொகையை அண்மையில் கட்டிபுட்டாராம் சசிகலா.
இதனையடுத்தே இதுவரை முடக்கப்பட்ட அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுவிட்டனவாம். அதில் ஒன்றுதான் போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம் நடத்தப்பட்ட பங்களாவுமாம்.
ஒருவழியாக அத்தனை சிக்கல்களையும் தீர்த்துவிட்ட சசிகலா இனி தீவிர அரசியலில் முழு வீச்சாக இறங்குவாராம்.