Breaking News :

Sunday, February 25
.

100 நாள் பைக் பயணத்தை லண்டனில் இருந்து தொடங்கிய சத்குரு


மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஈசா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு, நூறு நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை இன்று (மார்ச் 21) லண்டனில் இருந்து  துவங்கினார்.

லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயது சிறுமி கொடி அசைத்து, இப்பயணத்தை துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார். இப்பயணத்தில் அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என பல தரப்பட்ட பிரபலங்களுடன் மண் வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார். மேலும், அந்தந்த நாடுகளில் முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்க உள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.