'ருத்ரம்'-2 என்ற அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், 'ருத்ரம்' ரக அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் ருத்ரம்-2 ரக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை இன்று(29.05.2024) நடந்தது. இந்த ஏவுகணை, 'சுகோய் - 30' போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
அப்போது திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது. ருத்ரம் -2 ரக ஏவுகணையானது பல்வேறு கோணங்களில் இருந்து, எதிரிகளின், 'ரடார்' மற்றும் தொலைதொடர்பு சாதனம், கண்காணிப்பு சாதனம் ஆகியவற்றை மீறி, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் பெற்றது.