பேடிஎம் நிறுவனம் ஆர்பிஐ விதித்த பல்வேறு விதிமுறைகளை மீறியதால் இனி பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் வசூலிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு எந்தவிதமான பரிவர்த்தனைகளிலும் ஈடுபடக்கூடாது. இனிமேல் பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பேடிஎம் வாலட்டில் பணம் பெறக்கூடாது.
பாஸ்டேக் ரீசார்ச் செய்வது போன்றவற்றையும் செய்யக்கூடாது என ஆர்பிஐ பல உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஏனெனில் பேடிஎம் என்பது வெறும் பணப்பரிமாற்றம் செய்யும் செயலி மட்டும் இல்லை.
பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆகும். எனவே வங்கிகள் பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை பாலோஅப் செய்வது அவசியம். என்னென்ன விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென ஆர்பிஐ ஏற்கனவே தெரிவித்துள்ளது.
பேடிஎமில், வாடிக்கையாளர்கள் யாராவது பணம் வைத்திருந்ததால் அதை மார்ச் 15ம் தேதிக்குள் காலி செய்துவிடுவது நல்லது. ஏனெனில் அதன் பிறகு பேடிஎமில் எந்தவிதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பணத்தை வேறு வங்கி கணக்கு மாற்றி கொள்ள முடியும். மேலும் பேடிஎம் மார்ச் 15ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் கணக்குகளை செட்டில் செய்ய வேண்டுமென்றும் ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது.
பேடிஎம் நிறுவனம் பல்வேறு வகையான கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அது குறித்த எந்த தகவலையும் ஆர்பிஐ வெளியிடவில்லை. ஏற்கனவே இந்த கம்பெனி நஷ்டத்துலதான் இருக்கு. ஐபிஒ வெளியிட்ட பிறகு பங்கு விலை எதிர்பார்த்த அளவு ஏறால. இதனால அந்த பங்கை வைத்திருக்கும் பலரும் கவலையில இருக்காங்க.