ராவணன் முழுமையான வரலாறு மிகப் பெரியது. சுருக்கமான வரையில் பார்க்கலாம். ராவணன் இயற்பெயர் தஸ்முக், ராவநாதம் என்ற இசைக்கலையில் வல்லவன் என்பதால் ராவணன் என்று பெயர் பெற்றான்
ராவணன் பிறந்தது உத்திர பிரதேசத்தில் உள்ள பிஷ்ரஹ் கிராமத்தில் தான், ராவணனின் தந்தை பெயரில் தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது ."ராவணன் தந்தை விஸ்வரசு புலஸ்திய முனிவரின் மகன் மற்றும் படைப்பு கடவுள் பிரம்மனின் பெயரன்" , தாய் கேகேசி ராட்சசன் சுமாலியின் மகள். விஸ்வரசுவின் முதல் மனைவி இளவிதை, இவர்களின் மகன் குபேரன். இலங்கையின் முதல் அரசன். புஷ்பக விமானம் இவருடையதே. தந்தை மரபின் படி ராவணன் ஒரு பிராமணன். உபிகாரன், வடக்கன் அல்லது ஆரியன்.
ராவணனுக்கு விபிஷ்ணன், கும்பகர்ணன், கரன், தூஷன், அஹிராவணன் என்கிற சகோதரர்களும், சூற்பனகை என்ற ஒரே சகோதரியும் உண்டு. உத்திர பிரதேச காடுகளில் சுற்றி திரிந்த இந்த அசுர கூட்டம் தனது சகோதரன் குபேரன் மீது வன்மத்தோடு வளர்ந்து வந்தது. குபேரன் இலங்கையின் முதல் அரசன். ராவணன் அணைத்து கலைகளையும் கற்று தெரிந்தவன். வீணை மீட்டுவதில் வல்லவன். தீவிர சிவ பக்தன். ராவணன் இறை பக்தியினால் ஏராளமான வரங்களை பெற்றிருந்தான். தவ வலிமையினால் கைலாச மலையையும் அசைத்து பார்த்தவன்.ராவணன் தன்னை கொல்பவன் சாதாரண மனிதனாக இருக்க வேண்டும் அவனுக்கு எந்த திவ்ய சக்தியும் இருக்க கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். தேவரை வெல்லும் சக்தி கொண்ட ராவணன் தன்னை மனிதனால் அழிக்க முடியாது என்று இருமாறுப்போடு இருந்தான்.
அண்ணன் குபேரனை இலங்கையிலிருந்து விரட்டி நாட்டை கைப்பற்றினான். அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்தான்.அதன் பின் ராவணன் தேவலோகம் சென்று இந்திரனை வென்றான். ராஜஸ்தானில் உள்ள மண்டூரில் மாயாசுரன் மற்றும் அப்சரா ஹேமாவிற்கும் பிறந்த மண்டோதரியையும், தன்யா மாலினியையும் மனந்தான். இன்றும் ஜோத்பூர் அருகே உள்ள பிராமனர்கள் ராவணனை தங்கள் மருமகனாக கருதுகின்றனர். ராவணனுக்கு அங்கு கோவிலும் பூஜையும் உண்டு. ராவணனுக்கு மேக நாதன், அதிகாயன், அக்ஷய குமாரன் என்ற மகன்கள் உண்டு. மேக நாதன் மாபெரும் மாய ஜாலக்காரன், இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டவன். ராவணனின் பெரும் பலமும் இவன் தான்.
ராவணன் தன் காலகட்டத்தில் ஒரு மாபெரும் வீரனாக அரியப்பட்டான். தன்னை வீழ்த்த ஆளில்லை என்று கொக்கரித்தான். அந்த ஆணவத்தில் வாலியிடம் சேட்டை செய்ய, வாலி ராவணனை தன் வாலில் சுருட்டி பந்தாடி, கதற விட்டு அடக்கி அடிபணிய வைத்து சென்றான்.
ராவணன் தங்கை சூற்பனகை ராமன் மீது காமத்தினால் பாய, லக்ஷ்மன் அவள் மூக்கையும் காதையும் அறுத்து அவமானப்படுத்த, இலங்கை சென்ற சூற்பனகை தனது அவமானத்திற்கு பழி தீர்க்க சீதையை கடத்தி வந்து திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகிறாள். மண்டோதரி ராமன் பெரிய வீரன் என்றும், அவரது மனைவியை கடத்துவது அதர்மம் என்றும் இதனால் இலங்கையும் தன் குடும்பமும் அழியும் என்று கூறி ராவணனை தடுக்கிறாள். ஆனாலும் சூற்பனகையின் வற்புறுத்தலில் மனைவியின் எச்சரிக்கையை மீறுகின்றான். மண்டோதரி எதிர்காலம் கணிக்க தெரிந்தவள்.ராவணனும் ஜோதிடத்தில் தேர்ந்தவன், ஆனால், ஆணவத்தில் அனைத்து கிராகங்களையும் வென்று தன் மீதே பார்வை இருக்க வேண்டும் என்று பணித்தான்.அதில் சனி பகவான் பார்வை பட அழிவு ஆரம்பித்தது.
ராவணன் மாகாராஷ்டிராவில் உள்ள பஞ்சவடிக்கு சென்று முனிவர் வேடத்தில் பிச்சை கேட்பது போல் சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றான். அப்போது ஜாடாயு கழுகு ராவணனுடன் சண்டையிட்டு படு காயமடைந்தது. ஜாடாயு ராமர், லட்சுமணன் வருகைக்காக காத்திருந்து விபரம் கூறி விட்டு ஜடாயு உயிர் துறந்தது.
ராவணன் அரக்க குணத்தில் இருந்தாலும் ஒரு போதும் தன் பிராமண கடமையை விட்டுக் கொடுத்ததில்லை ," ராமர் போரில் வெற்றி பெற யாகம் செய்து கொடுத்தவன் ராவணன். போரில் ராவணன் இறக்கும் தருவாயில், ராமர் லக்ஷ்மணனை அழைத்து ராவணனிடம் அறிய நிறைய விஷயங்கள் உள்ளது. நீ போய் அவரை வணங்கி உபதேசம் கேட்டு வா என்று அனுப்பினார்.
ராவணன் 3 உபதேசங்கள் கூறி லட்சுமணனை வாழ்த்தினார். முதலாவது உபதேசம் : வாழ்வில் எந்த ஒரு சுப காரியத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அதேபோல் கெட்ட காரியத்தை எந்த அளவிற்கு தாமதப்படுத்த வேண்டுமோ அந்த அளவிற்கு தாமதமாக செய்ய வேண்டும்- ராமனை பற்றி தெரியாமல் தங்குமிடத்திற்கு தாமதமாக வந்ததால் தனக்கு இந்த நிலை நேர்ந்துவிட்டது என்று ராவணன் கூறியுள்ளார்.
இரண்டாவது உபதேசம் : எப்போது நமது எதிரியை குறைவாக எண்ணக் கூடாது. குரங்கையும், கரடியையும் குறைவாக மதிப்பிட்டதால் அவர்களுடனான போரில் தோற்றேன். பிரம்மனிடம் சாகா வரம் கேட்ட போது , குரங்கு மற்றும் மனிதனை தவிர வேறு ஒருவரால் உன்னை கொல்ல முடியாது என்று பிரம்மா கூறினார். அப்போது, இந்த 2 உயிரினங்களுக்கு தன்னை கொல்ல தகுதியில்லை என குறைத்து மதிப்பிட்டதால் தான் வாழ்க்கையை இழந்ததாக ராவணன் கூறியுள்ளார்.
3. மூன்றாவது உபதேசம்: வாழ்க்கையில் ஒருவரது ரகசியத்தை எந்தக் காரணம் கொண்டும் உலகத்தில் யாரிடமும் கூறக் கூடாது. நான் அப்படி விபிஷணனிடம் தனது மரணம் குறித்த ரகசியத்தை பகிர்ந்தது தான் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று கூறியுள்ளார்.
இராவணனின் மறைவிற்கு பின் அவரது மனைவி மண்டோதரியை விபிஷனன் மணந்து கொள்கிறான். வட இந்தியா முழுக்க ராவணனை எரித்தாலும் , ராவணன் பிறந்த பிஷ்ரஹ் நகரில் எரிப்பதில்லை. ராவணனுக்கு திதி கொடுக்கின்றனர். மத்தியப் பிரதேசத்திலுள்ள ராவண நகரில் உள்ள கன்யாகுப்ஜ பிராமணர்கள் ராவணனின் வம்சாவளியினர் . ஜோத்பூர் பிராமணர்களும் ராம லீலா கொண்டாடுவதில்லை. உபி, மபி மாநிலங்களில் ராவணனுக்கு கோவில் நிறைய உண்டு. உபி மண்ணின் மைந்தன் ராவணனை இலங்கை மறந்தாலும் முன்னோரை வடக்கன்ஸ் மறப்பதில்லை.