நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு நாளை முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியபடி, 16-ந்தேதி (இன்று) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வரவேண்டிய, நிலுவையுள்ள கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பை கடைகளில் இறக்கும் பணி நடைபெறும்.
17-ந்தேதி (நாளை) காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் திறந்து செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.