நூல்: ரத்தன் டாட்டா
ஆசிரியர்: என் . சொக்கன்
பதிப்பு:கிண்டில்
பக்கங்கள்:208
யார் இந்த ரத்தன் டாடா ?
நம் தேசத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆரம்பர பொருட்கள் வரை அனைத்திலும் தன் தடத்தை பதித்த இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை நிறுவனங்களில் டாப் 5 இடங்களில் ஒன்றாக இருக்கும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர்.
இந்த நூல் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை மட்டும் விவரிக்கவில்லை டாட்டா குழுமத்தின் வரலாற்றையும் சேர்த்தே விவரிக்கிறது.
1857 ஆம் ஆண்டு இந்தியா தீவிர சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது சுதந்திரத்திற்கு பிறகு நாம் என்ன செய்ய போகிறோம் என்று 1968 ஆம் ஆண்டிலேயே திட்டம் தீட்டி செயல்படுத்திக்கொண்டிருந்தார் ஜே.என் டாடா என்று அனைவராலும் அழைப்படும் ஜாம்டெட்ஜி நுஸ்ஸர்வான் டாடா.
1968 ஆம் ஆண்டு 21,000 ரூபாய் முதலீட்டில் தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார் அந்த காலத்தில் அது மிகப்பெரிய தொகை.
நண்பர்களை சேர்த்துக் கொண்டு இந்தியாவில் சில பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்த்த ஜே.என். டா நமக்கான (இந்தியாவிற்கான) பொருட்களை நாமே தயாரித்து நமக்கு போக மீதி இருப்பதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்,எந்த காணத்தை கொண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தார்.
நண்பர்களை சேர்த்துக்கொண்டு ஒரு தொழிலில் வரும் லாபத்தை இன்னொரு தொழில் தொடங்கி பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தினார். இப்படி கிட்டத்தட்ட 250 கம்பெனிகளை வைத்திருந்தது . டாடா குழுமம்.
ஜாம்டெட்ஜி வெளிநாட்டவர் ஒருவருடன் மும்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு போனபோது அந்த ஹோட்டலின் முகப்பில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்ற வாசகம் எழுதியிருந்ததைப் படித்து அவமானப்பட்டு கொதித்திப் போய் திருப்பியவர், நானே கட்டுவேன் இந்தியர்களுக்காவே இங்கிருக்கும் அனைத்து ஹோட்டல்களையும் விட மிகப்பெரிய ஹோட்டல் என்று சபதம் செய்து அதன்படியே 1903 -ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் தாஜ் ஹோட்டல்.
அவருக்குப் பிறகு டாட்டா குழுமத்தின் தலைவர்களாக தரோபாஜி டாடா, நௌரோஜி சாக்லத்வாலா மற்றும் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய்.டாடா சுறுக்கமாக ஜே.ஆர்.டி டா.
பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்த ஜே .ஆர்.டாட்டாதான் தனது கடின உழைப்பால் டாட்டா குழுமத்தின் தலைவராக உயர்ந்தார்.
இந்தியாவின் முதல் ஏர்லைன்ஸ் விமானம் தொடங்கி அதில் விமானியாகவும் இருந்தார்.
இவரின் பல திட்டங்கள் இந்திய தொழில் துறை வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதால் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை இவருக்கு அளித்து கௌரவித்தது இந்திய அரசு. இந்த விருதைப் பெற்ற முதல் தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் அரை நூற்றாண்டு காலம் டாட்டா குழுமத்தின் தலைவராக அதை கட்டிக்காத்த ஜே.ஆர்.டிக்கு பிறகு அவரின் மூலம் தேர்வானார்தான் ரத்தன் டாடா.
டாட்டா குடும்பத்திற்கு ரத்தன் டாடா ஒரு வகையில் பேரன். குடுபத்தின் உறவு என்பதால் இவர் தலைவராக தேர்வானாரா? என்றால் அதுதான் இல்லை டாட்டா குடுபத்தின் நேரடி வாரிசு என்றாலும் டாட்டா குழுமத்தின் தலைவராக முடியாது.
தனது தகுதியை நிருபித்தால் மட்டுமே இந்த பதவிக்கு வரமுடியும்.
பதவி என்பது தன் வீட்டு பரம்பரை சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கும் நம் தேசத்தில்தான் டாட்டா குழுமமும் இருக்கிறது.
டாட்டா குடுபத்தின் உறவு என்றதால் சாதன ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட ரத்தன் டாட்டாவுக்கு கிடைக்கவில்லை மிகவும் கடைநிலை ஊழியரிலிந்து படிப்படியாக உயர்ந்து தலைவர் பதவிக்கு வந்தார்.
தலைவர் பதவிக்கு வந்தபிறகும் ஏகப்பட்ட எதிர்ப்புடனேதான் தனது திட்டங்களை செயல்படுத்தினார்.
இவர் பதவிக்கு வந்த பிறகு நிறைய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்.
தனி தனியா இருந்த 200 நிறுவனங்களை ஒன்றாக்கி 80 நிறுவனங்களாக மாற்றினார்.
இவர் தலைவராக இருந்த போதுதான் இந்தியர்களுக்காக இந்தியாவே தயாரித்த முதல் காரான டாட்டா இன்டிகா கார் 1998 டிசம்பர் 30 வெளியானது.
அதேபோல உலகமே வியக்கும் வண்ணம் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்றவகையில் ஒரு லட்சத்தில் நானோ கார் தயாரித்து சாதனைப் படைத்தார் .
இதன்மூலம் தொலைநோக்கோடு வழிநடத்தி உலகையே ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் ரத்தன் டாடா.
ஜாம்டெட்ஜியால் இந்தியாவில் தொடங்கிய தனது வியாபார குழுமத்தினை, இன்று உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர் ரத்தன் டாடா. வெளிநாட்டில் முதலீடு செய்த முதல் தொழில்முறை நிறுவனம் டாட்டா குழுமம்தான்.
உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அதனைக் கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் என்ற வரிகளுக்கு சொந்தக்காரரான ரத்தன் நாவல் டாடா.
தன் மீதி வீசப்பட்ட ஒவ்வொரு கற்களையும் இன்று வைரமாய், தொழிற்துறையில் ஜொலிக்க வைத்துவிட்டார்.
ரத்தன் டாட்டா, டாட்டா குழுமத்தில் எப்படி சேர்க்கப்பட்டார் ? அதற்கு பிறகு அவருக்கு எவ்வளவு சோதனைகள் ஏற்ப்பட்டது?
எப்படி தலைவரானா?
தலைவரான பிறகு அவரின் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெற்றி தோல்வி போன்ற அனைத்தும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது என்றாலும் இது ரத்தன் டாட்டாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ரத்தன் டாட்டா விடாமுயற்சியின் அடையாளம். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நன்றி : ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி