சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இன்று (11.11.2021) காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்யும் உதயகுமார், வ/28, என்பவர் மேற்படி இடத்தில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த உதயகுமாரை மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.