சைக்கியாட்ரிஸ்ட்:
PSYCHIATRIST..என்பவர்.. MBBS மருத்துவ படிப்பை படித்து முடித்து.. MD.psychiatric medicine… என்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்து இருப்பார்கள்..அல்லது.. DPM.. diploma in psychiatric medicine என்ற முதுநிலை பட்டயப்படிப்பு படித்து இருப்பார்கள்.
இந்த மருத்துவர்கள் மட்டுமே.. மனநல நோய்களுக்கு.. சிகிச்சை அளிக்க தகுதி மற்றும் மெடிக்கல் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள்.. இவர்கள் மட்டுமே மனநோய்களுக்கான மாத்திரைகள் மருந்துகள்… ELECTRO CONVULSIVE THERAPY போன்ற ஷாக் ட்ரீட்மெண்ட் கள் தர வேண்டும்.
நாளை அவர்களிடம் சிகிச்சை பெற்ற நோயர்கள்.. ஏதேனும் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் பட்சத்தில்.. நீதிமன்றம் சைக்கியாட்ரிஸ்ட் மருத்துவரின்.. பதில்களையும்… மருத்துவ சான்றுகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்.. ஏனெனில் நவீன மருத்துவம் சார்ந்த பட்டம் பெற்று இருப்பதால்.. அவர்களின் சிகிச்சை முறைகள் மட்டுமே சட்ட வரையறைக்குள் கட்டமைக்கப் பட்டு இருக்கிறது. example டாக்டர்.ஷாலினி அவர்கள் தமிழக மக்கள் அறிந்த மிகச்சிறந்த சைக்கியாட்ரிஸ்ட்.
சைக்காலஜிஸ்ட்:
Psychologist என்பவர்கள்.. MSc .. psychology படித்து.. M.phil clinical psychology செய்து.. பதிவு பெற்று இருக்க வேண்டும்.. அப்போது அவர்கள் மனநோயர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் தகுதியை பெறுகிறார்கள்.
இவர்கள்.. நோயர்களுக்கு மாத்திரை மருந்துகள் மற்ற தெரபிக்கள் கொடுக்கும் உரிமை கிடையாது.. மேற்படி பரிந்துரை செய்ய.. சட்ட நடவடிக்கைகளை நேரிட வேண்டி இருக்கிறது. இவர்களின் கருத்துக்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. சைக்கியாட்ரிஸ்ட் மருத்துவரின் பரிந்துரைப்படி நோயர்களுக்கு கவுன்சிலிங் இவர்கள் கொடுப்பார்கள்.