என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது.
2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள்.
‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.
தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம்- பிரதமர் நரேந்திர மோடி.
இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன்.
எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.
தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது.
2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கு வந்த போது மரியாதைக்குரிய எம்ஜிஆர் என் நினைவுக்கு வந்தார். நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்கு சென்றுள்ளேன். நல்லாட்சி நடத்தியதன் மூலம் தரமான கல்வி, சுகாதாரத்தை தமிழக மக்களுக்கு தந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் அவரை மதித்தார்கள்.
ஏழை மக்கள் அனைவரும் ஒப்பற்ற தலைவராக மக்களை புகழ்ந்து வருகின்றனர். குடும்ப ஆட்சி நடத்த எம்ஜிஆர் ஆட்சிக்கு வரவில்லை, திமுக எம்ஜிஆரை அவதூறு செய்கிறது.
இன்றைக்கு திமுகவால் தமிழ்நாட்டில் எம்ஜிஆரை கேவலப்படுத்தும் ஆட்சி நடந்து வருகிறது. எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்தவர் அம்மா ஜெயலலிதாதான் என்பதை என்னால் சொல்ல முடியும். அவருக்கு இந்த மண்ணில் இருந்து மீண்டும் அஞ்சலியை செலுத்துகிறேன். ஜெயலலிதா அவர்களுடன் பல்லாண்டு காலம் நெருங்கி பணியாற்றி உள்ளேன். எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடித்து அவர் மக்கள் வளர்ச்சிக்கு பணியாற்றியதால்தான் ஜெயலலிதாவை அனைத்து வீடுகளிலும் நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இராணுவ காரிடார் அமைய அனுமதிக்குமா?, விருதுநகரில் பிஎம் ஜவுளி பூங்கா மூலம் பலருக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. முத்ரா கடன் திட்டம் மூலம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி தரப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் சாத்தியம் ஆகுமா?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்தி கூட்டணி ஜெயிக்காது என்பது தெரிந்துவிட்டது, ஆனால் தமிழ்நாட்டில் ஜெயிக்கலாம் என இந்தி கூட்டணி நினைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை இதற்கு பூட்டுப்போடுவதாக அமையும். மீண்டும் பாஜக ஆட்சி அமைய பாஜக தொண்டர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இளைஞர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடியின் உத்தரவாதம் இருந்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக என்றைக்கும் ஆட்சியில் இருந்தது இல்லை; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதயத்தில் பாஜக் உள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் பாஜகவின் பலத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக மக்களை திசைத்திருப்பி நாற்காலியை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள் என்பது அத்தனை பேருக்கும் தெரியும், ஆகவே இவர்களின் கபடநாடகம் வெளியே வந்துவிட்டது. அதனால் தமிழக மக்கள் பாஜகவை நம்பத் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை தருகிறது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்த மத்திய அரசு கொடுத்த பணத்தை விட மூன்று மடங்கு அதிக பணத்தை மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை, அவர்களுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எந்த பங்கும் இல்லை.
மோடி அத்தனை ஏழைகளுக்காகவும் வேலை செய்து கொண்டிருக்கிறார், அதனால்தான் நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மோடி உத்தரவாதம் என்று சொன்னால் 3.5 கோடி மக்களுக்கு அரிசி தருகிறோம், 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்துள்ளோம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு கட்டி கொடுத்துள்ளோம். ஆகவே மோடி கேரண்டி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் அரசியல் சரித்திரத்தில் நாம் அமர்ந்துள்ளோம். இத்தனை ஆண்டுகளாக எதற்காக காத்திருந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்களில் ஐயா நரேந்திர மோடி அவர்கள் 400 இடங்களை தாண்டி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்கள் வெற்றி பெறுவார்கள்.
வரும் 60 நாட்களில் கண் துஞ்சாமல் உழைத்து தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு நாம் திரும்பி பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மாற்றம் பல்லடத்தில் நடந்தது என சொல்ல வேண்டும். பிரதமர் மோடியின் புகழ் பட்டித்தொட்டி எல்லாம் உள்ளது.
மஞ்சளுக்காக் சந்தையை ஏற்படுத்தி, வாரியத்தை பிரதமர் உருவாக்கி உள்ளார். நீலகிரியில் உள்ள தொடா பழங்குடியினருக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி அவர்கள்தான், அதற்காகத்தான் ஜல்லிக்கட்டு காளை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
நம்முடைய ஆட்சியின் சாட்சியாக, எல்லோரும் மோடி, மோடி என சொல்ல தொடங்கிவிட்டார்கள். மக்கள் பொய் பரப்புரைக்களுக்கு காது கொடுக்க மாட்டார்கள். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
அர்ப்பணிப்போடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக பாடுபட வேண்டும். நமக்கு அன்பும், ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;
இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் ஒரு முறை அட்சியில் அமர்ந்து உலகை இந்தியாவின் காலடியில் விழ வைக்க கூடிய காலத்தை கொண்டு வருவதற்காக நாமெல்லாம் பெரும் எதிர்பார்ப்போடு இருந்து வருகிறோம்.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறைந்தப்ட்சம் 25 இடங்களை கைப்பற்றும் என நம்முடைய மாநிலத் தலைவர் கூறி உள்ளார். அதை நிறைவேற்றும் களப்பணியில் இறங்கும் கட்டாயம் நமக்கு உள்ளது.
நேரு உட்பட எந்த பிரதமரும் தமிழ் மொழியின் பெருமையை பெற்றி இந்த அளவுக்கு மேன்மை படுத்தி சொன்னதாக சரித்திரமே கிடையாது. அவர்களுக்கு தெரிந்த ஒற்றை தமிழ்வார்த்தை வணக்கம் என்பது மட்டும்தான். அதையும் மேடையில் எழுதி கொடுத்துவிடுவார்கள். வடக்கில் உள்ளவர்கள் தமிழை கற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஜி சொன்னார்கள்.
தமிழ் பழமையான மொழி என்பது எல்லோரும் சொல்லக்கூடிய விஷயம், அதை வடக்கே உள்ளவர்கள் சொல்ல மாட்டார்கள், ஆனால் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழ் என்று சொல்லி உள்ளார்.
சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி சொல்லி உள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் முன்னேற்றம், இலங்கை தமிழர்கள் முன்னேற்றம் ஆகியவற்றை பிரதமர் மோடி செய்துள்ளார். இந்த உலகம் பிரதமர் மோடியின் ஆளுமையை ஏற்றுக் கொண்டு விட்டது. பிரதமர் மோடியின் பார்வை நம்மீது படாதா என உலகம் ஏங்கி கொண்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.