சேலம் மாவட்டம் எடப்பாடில இருந்து 12 கிமீரும், மேட்டூர் டேம்-ல இருந்து 25 கிமீ தூரத்துலையும், சேலம்-ல இருந்து 55கிமீ தொலைவிலும் இருக்கு,
இந்த பூலாம்பட்டியை குட்டி கேரளானு ஏன் சொல்றாங்க, ஏன்னா இங்க இருக்க அவ்வளவு அழகான இந்த ஆறு காரணமாய் அமையுது, மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் இந்த பூலாம்பட்டியில் மதகு, செக் டேம் அமைத்து சேமித்து இங்கே மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க எனவே இங்கே ஆறு நீண்டு காணப்படுகிறது, இங்க இருக்குற மிக அழகான ஒன்னு போட்டிங் தான், படகு பயணம், இதுவும் இருக்கு.
ஒன்னு பயணிகள் போட்டிங் அது இக்கரை முதல் அக்கறை வரை போகுது பூலாம்பட்டி போட்டிங் அதுக்கு 10 ரூபாய் முதல் கட்டணம் பெறப்படுகிறது, ஒரு பக்கம் பூலாம்பட்டி சேலம் மாவட்டத்துடன் தொடர்புபடுத்தி கொள்கிறது, ஒரு பக்கம் நெரிஞ்சிப்பேட்டை ஈரோடு மாவட்டத்துடன் கனெக்ட் ஆகுது,
ரெண்டாவது டூரிஸ்ட் போட்டிங் அதாவது சுற்றுலா படகு, அதுல இந்த ஆறு முழுவதும் சுற்றி காண்பிக்கிறார்கள், ஆறு சுற்றிலும் தெரியும் மலையும் அவ்ளோ அழகு,
பூலாம்பட்டி படகு மட்டும் அல்ல மீன் கடைகளும் அவ்ளோ அழகு டேஸ்ட்.
காவிரி ஆத்து தண்ணி மேட்டூர் மூலமா வருது, பக்கத்துல மீன் பிடிச்சிட்டு இருகாங்க, அத வாங்கி பக்கத்துல கடைல குடுத்தா செம்ம டேஸ்ட்டா சமைச்சு கொடுக்குறாங்க, இன்னும் பூலாம்பட்டி ஊரு சொல்லியே ஆகணும் அவ்ளோ அழகா விவசாய பூமி அவ்ளோ பசுமையான அழகா இருக்கு, ரோடுல போகும் போது ரெண்டு பக்கமும் தென்னமரம், ஆடு மாடுகள் மேய்ச்சல், அழகிய சூரிய உதய, மறைத்த காட்சிகள் விருந்து,
பூலாம்பட்டி ஒரு அழகான கிராமம், அது முழுக்க முழுக்க விவசாய நிலம், இதன் முழு அழகும் இங்குள்ள காவிரி ஆறு, நீங்கள் இங்கு சென்றால் இயற்கை உங்களுக்கு அமைதியான சூழலை தரும்.