பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று, நமது மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களுடன், தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, பாமக நிறுவனர் ஐயா Dr.S.ராமதாஸ் அவர்களையும், பாமக தலைவர், அண்ணன் Dr. அன்புமணி ராமதாஸ் அவர்களையும் நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ஐயா Dr.S.ராமதாஸ் அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மாநில தலைவர் K.அண்ணாமலை