இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விட்டது.
குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை.
ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை.
காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு- பிரதமர் நரேந்திர மோடி.
இளம் எம்.பிக்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது.
எதிர்க்கட்சிகளுக்கு பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் என யாரும் சிறுபான்மையினராக தெரியவில்லை- பிரதமர் நரேந்திர மோடி.
ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்.
3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும், இது மோடியின் கியாரண்டி.
வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், மேக் இன் இந்தியா நாட்டின் சாதனைகள்.
அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கமாக இருக்கிறது - பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன.
இந்தியாவின் GDP 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது; விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.
உலகின் நலனுக்காக இந்திய பாடுபடுவதை G-20 மாநாடு மூலம் உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
பாஜக-வின் 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும்.
பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும்.
அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.