நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரை.
கடந்த 5 ஆண்டுகள் இந்திய நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது.
17வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மிகவும் கடிமான காலகட்டத்தை சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் கூட இந்திய நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருமாறியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி முதலில் சிலருக்கு சிரமமாக இருந்தாலும், பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.
ஒரு தேசத்திற்கு இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள் இருக்க கூடாது.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான தேவையான சமூக நீதி கிடைத்துள்ளது.
அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட ஆத்மாக்கள் எங்கிருந்தாலும் நம்மை வாழ்த்தும்.
முத்தலாக் தடை சட்டமும், மகளிர் இட-ஒதுக்கீடும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது.
முத்தலாக் தடை சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டது.
தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழக்க நேரிட்டது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.