நாடாளுமன்றத் தேர்தல் 2024 அறிக்கையில் அதிமுகவின் முக்கிய
வாக்குறுதிகள் கொண்ட கையேடை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
மாநில முதல்வரின் ஒப்புதலோடு ஆளுநரை நியமக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மேகதாது அணை திட்டத்தை தடுக்க நடவடிக்கை
மருத்துவப் படிப்புக்கான நீட்டுக்கு (NEET) மாற்றுத் தேர்வு முறை
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தல்
கூட்டாட்சி முறை வலுப்பட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை; கச்சதீவு மீட்பு
சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை;
இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பாதை அமைத்தல்
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம்