நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இளைஞர்கள் 2 பேர் திடீரென்று அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு. உள்ளே நுழைந்த இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பியபடி சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்றனர்.
துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வாலை நோக்கி ஓடியவர்களை எம்.பி.க்கள் மடக்கி பிடித்தனர். தாவி குதித்தபடி கைகளில் இருந்த வண்ண புகையை வெளியேற்றக்கூடிய பொருட்களை வீசியுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 22வது ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்த பாதுகாப்பு குறைபாடால் பெரும் அதிர்ச்சி. இதனை தொடர்ந்து அவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.