2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி "தேசிய ஜனநாயக கூட்டணியான "NDA" கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் நமது" இராமநாதபுரம்" பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் "புரட்சிக்காவலர்" ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் BA.,MLA அவர்களின் தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டம் இன்று (01.04.2024) திருச்சுழி - G.S.T திருமண மஹாலில் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த இராமநாதபுரம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மாண்புமிகு திரு.G.K.வாசன் MP., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.