அண்ணா தி.மு.க பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், தலைமைக்கழக முகவரி. தொலைபேசி எண் போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.