வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நம் கழக வேட்பாளர் சகோதரர் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு ஆதரவாக சென்னை வடக்கு மாவட்டம் தண்டையார்ப்பேட்டையில் இன்று வாக்குச் சேகரித்தோம்.
வடசென்னை வளர்ச்சித் திட்டம் தொடங்கி எல்லோரையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துச் சொல்லி, பரப்புரை செய்தோம்.
வடசென்னையின் வெற்றி, இந்தமுறை வரலாற்று வெற்றியாகிட அயராது உழைப்போம்.