Breaking News :

Tuesday, December 03
.

சிறிய முதலீட்டில் அதிக வருமானம்?


காளான் வளர்ப்புக்கு குறைந்தபட்ச முதலீடு  20,000

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில்.
2)காளான் விதை .
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
5)தண்ணீர் குறைந்தே பட்சம் 100 லிட்டர் / நாளைக்கு.
6)வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க கெமிக்கல்
[ பார்மோலின் ,பெவிஸ்டின் ]
இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது  , முதலீடு  என்பது  ரூ.1000 ரூபாயிலும் தொடங்கலாம் . முதலீடு என்பது நாம் எத்தனை  படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து  மாறுபடும் . ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான  செலவு ரூ.40- 50 வரை ஆகும்

செய்முறை:
வைகோலை பதப்படுத்த இரண்டு முறை உள்ளது :முதலில் வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும் . அதற்கு இரண்டு முறை உள்ளது . (கிருமிகளை அழிக்கும் முறை 1)

1)கொதி நீரில்  அவித்தல் முறை
  (கிருமிகளை அழிக்கும் முறை 2)
2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை

கொதி நீரில்அவித்தல்முறை (இது சிறிய அளவில் காளான் உற்பத்திக்கு )
நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து . இதனை ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் இது முதல் முறையாகும்.
2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை . ( இது பெரிய  அளவில் காளான் உற்பத்திக்கு )

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி  இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும்,இது இரண்டாவது  முறையாகும்.        
            
காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதோ  ஒரு  முறையை பயன்படுத்தி, வைகோலில் உள்ள கிருமிகளை அழித்த  பிறகு .இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும் . ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.

இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.