ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆசை ஆசையாய் 14,000 கோடியில் கட்டிய அன்ட்லியா வீட்டில் 2012 முதல் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் இருந்து தான் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. குடும்பத்திலும் சரி, வர்த்தகத்தில் இருந்தும் சரி. மேலும் அம்பானி தனது பிள்ளைகள் உடன் குடியேறிய இந்த வீட்டில் தற்போது மருமகன், பேரன், பேத்தி என மிகப்பெரிய வீடாக மாறியுள்ளது.
அன்ட்லியா வீட்டை பற்றி பேசினாலே இந்த வீட்டின் மதிப்பு தான் முக்கியமாக விவாதிக்கும் விஷயமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய மற்றும் காஸ்ட்லியான தனியார் வீடாக உள்ளது. முகேஷ் அம்பானியின் அன்ட்லியா வீடு தெற்கு மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது, இது 'பில்லியனர்ஸ் சாலை' என்றும் அழைக்கப்படுகிறது.
பில்லியனர்ஸ் சாலை என்று அழைக்கப்பட முக்கிய காரணம், இந்த சாலையில் அம்பானியை போலவே பல பணக்கார தொழிலதிபர்கள், பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் உள்ளனர். அப்படி இந்த தெருவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா..?
அம்பானி வீடு இருக்கும அதே தெருவில் தான் ஓஸ்வால் குடும்பம் உள்ளது, 2020 ஆம் ஆண்டில், மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோதிலால் ஓஸ்வால் '33 சவுத்' இன் 13வது மற்றும் 17வது மாடி டூப்ளக்ஸ் வீடுகளை வாங்கினார். ஒரு சதுர அடிக்கு 1.48 லட்சம் ரூபாய் விலையில் இவர்களின் குடும்பம் இந்த வீட்டை வாங்கினார்கள்.
எஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூர் 2013 ஆம் ஆண்டில் மும்பையில் அல்டாமண்ட் சாலையில் சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீட்டை வாங்கினார்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதில் இருந்து மும்பையில் வசித்து வருகிறார், முதலில் வாடகைக்கு குடியேறிய என் சந்திரசேகரன் 2வது முறை பதவி நீட்டிக்கப்பட்ட உடன் இந்த வீட்டையே வாங்கிவிட்டார். அல்டாமவுண்ட் சாலையில் இருக்கும் முக்கியமான அப்பார்ட்மென்ட் கட்டிடத்தில் 11 மற்றும் 12வது மாடியில் டூப்ளக்ஸ் வீட்டை சுமார் 98 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
மேலும் டிரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்ஷ் ஜெயின் 72 கோடி ரூபாய்க்கு இதே பகுதியில் வீட்டை வாங்கி தற்போது குடும்பத்துடன் 2021 முதல் முகேஷ் அம்பானி வீட்டு தெருவில் வசித்து வருகிறார்.
JSW எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ-வான பிரசாந்த் ஜெயின், முகேஷ் அம்பானி இருக்கும் இதே சாலையில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான டூப்ளக்ஸ் வீட்டில் வசித்து வருகிறார். வர்த்தக துறையை தாண்டி இதே தெருவில் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகிய பிரபலங்கள் சிலரும் உள்ளனர்.