மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டாம் தேதியில் இருந்து மும்பையில் கனமழை பெஞ்சுகிட்டே இருக்குது. நேற்று இரவில் பெய்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்குது.
இன்றும் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில் , மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை முதல் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிச்சிருக்குது.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வீரர்கள் மும்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.