சிறு தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச்செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரி, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திரா, கேரளா, பீகார், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளாத 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
ரூ. 5 கோடிக்கு கீழ் வங்கிக்கடன் நிலுவையில் உள்ள சிறு கடனாளர்கள் தங்கள் கடனைத் திரும்பச் செலுத்த கூடுதல் அவகாவம் வேண்டும். இந்த நிதியாண்டின் முதல் ஆறுமாதங்களுக்காவது இந்தச் சலுகை அளிக்கப்பட வேண்டும். இதை ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் 12 மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலங்கள் தமது கூட்டு வலிமையை இந்த கொரோனா காலகட்டத்தில் உணர்த்த வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் ஒற்றுமையாக வலியுறுத்தியதால்தான் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க ஒன்றிய அரசு முன்வந்ததாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.