உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டார்
அண்ணா நகர் டி.பி. சத்திரம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 100, 102 , 105 வார்டு பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு 5kg அரிசி மற்றும் போர்வை மற்றும் பால்பாக்கெட் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.