நீங்கள் இதுபோன்ற Camera app பற்றி கேட்டிருந்தால் இது போல் ஒன்று இல்லை அது வெறும் Prank எனப்படும் கலாய்பதற்கான Apps.
இவைகளை போல கலாய்பதற்கான Apps ஏராளமாய் உள்ளன.
சரி உண்மையிலேயே ஆடைகளை ஊடுருவி மனித தோலை காட்டும் Camera இருந்தால் அதன் படங்கள் எப்படி இருக்கும்..?
கீழ்காணும் படத்தின் மேற்பகுதியில் இருப்பது போல் தான் இருக்கும்.
உங்கள் கேள்வி ஆடைகளை ஊடுருவும் Cameraக்கள் செயல் படும் விதம் பற்றியது..
விமான நிலையங்களிலும், இராணுவ சோதனைச்சாவடிகளிலும் பயன் படுத்தும் ஆடைகளை ஊடுருவி ஆடைகளின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காட்டும் Camera வில் தெரியும் படம் இப்படித்தான் இருக்கும்.
நாம் மருத்துவத்துக்கு பயன்படுத்தும் X Ray வானது முழு உடலையும் ஒருபுறமிருந்து மறு புறத்திற்கு ஊடுருவிச்சென்று உடலின் மறு புறம் வெளி வரும் கதிர்களை ஒரு Film அல்லது Detector ல் படும்படி செய்து படமெடுப்பர்.
ஆனால் விமான நிலையங்களில் பயன் படுத்தும் X ray வானது மனிதர்கள் மேல் பட்டு சிதறடிக்கப்படும் X கதிர்களை சேகரித்து அதிலிருந்து ஒரு உருவத்தை உருவாக்கும்.
ஆனால் இந்த வகை கருவிகள் 2012 வாக்கில் மருத்துவ, உடல்நல காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுவிட்டன.
பின்னர் Millimeter Wave Scanner என்ற முறையும் பின்பற்றப்பட்டது, மேலும் மிகவும் சந்தேகப்படும் நபர்கள் மீதுதான் தற்சமயம் இந்த Scanner முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பதிலில் மேலோட்டமாக தொழில்நுட்பங்களை பற்றிய அறிமுகம் மட்டும் பதியப்பட்டுள்ளது.
மேலும் தகவல் அறிய Google ஆண்டவரின் துணையுடன் தேடினால் பெறலாம்.