Breaking News :

Saturday, July 19
.

ராணுவத்தினர் இறந்தால் 21 குண்டுகள் சுடுகிறார்கள் ஏன்?


அக்காலத்தில் ஒரு நாட்டின் மீது எதிரி நாட்டு படைகள் போர் புரிய வேண்டும் எனில் அதற்கு அவர்கள் அந்த நாட்டை அடைய கடல் மார்கத்தை பின்பற்றினர். இதனால் ஒவ்வொரு நாட்டையும் ஆண்டவர்கள் தங்களின் கடற்படை சற்று வலுவானதாக அமைத்து எதிரி நாட்டவரிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர்.

அவர்களின் கடற்படை வீரர்கள் போர் கப்பலின் பீரங்கிகளும், Muzzle loader என்ற துப்பாக்கிகளையும் தங்களின் பிரதான ஆயுதமாக பயன்படுத்தினர்.  குறிப்பாக 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பெறும்பாலும் Muzzle loader என்ற வகையை சார்ந்தவையாக இருந்தது.

Muzzle loader துப்பாக்கி என்பது ஒரு முறை சுட ஒரு குண்டு மட்டுமே பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்திய பிறகு அந்த துப்பாக்கியில் மீண்டும் வெடிமருந்து நிரப்ப அதன் வாய் பகுதியின் வழியே துப்பாக்கி குண்டை லோட் செய்வர்.

ஆதலால் வீரர்கள் ஒரு முறை துப்பாக்கியால் சூட் செய்த பின் மீண்டும் சூட் செய்ய மறுபடியும் குண்டை லோட் செய்ய வேண்டும். அதற்கு சிறிது காலதாமதமாகும்.  அக்காலத்தில் இந்தியாவை ஆண்ட ஐரோப்பியர்களான பிரிட்டிஷார், போர்ச்சுக்கள், டச்சுகாரர்கள் மற்றும் ப்ரெஞ்சுகாரர்கள் போன்ற நாட்டவர்கள் இந்தியாவில் காலணித்துவத்தை அமைக்க தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.

அதற்கு இவர்களுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய கடல் வழியை பயன்படுத்தினர்.  அவ்வாறு பயனப்படுகையில் ஐரோப்பியர்களின் கடற்படையினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றது.

இவ்வாறு இரு நாட்டு கடற்படையினருக்கு இடையே நடைபெறும் சண்டையில் ஒரு நாட்டு படையினர் சமாதானம் மற்றும் சரணடைதல் போன்ற தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு விதிமுறையை பின்பற்றினர்.(உலக நாடுகளும் அவ்வாறே)

அந்த விதிமுறை என்னவென்றால் தாங்கள் பயன்படுத்திய Muzzle loader துப்பாக்கிகளை போர் கப்பலில் இருக்கும் கடற்படையினர் சமாதானம் மற்றும் சரணடைதலுக்காக வானத்தை நோக்கி சுட்டனர். மேலும் கப்பலில் உள்ள பீரங்கிகளை கடலின் வெற்று திசையை நோக்கி வெடிக்கச் செய்தனர்.

நான் முதலில் சொன்னது போல Muzzle loader துப்பாக்கியில் ஒரு முறை சுட்ட பின் மறுமுறை லோட் செய்த பின்னர் தான் சூட் செய்ய முடியும். இதற்கு சிறிது கால தாமதம் ஏற்படும் அல்லவா... மேல் நோக்கி சுட்டு தன்னிடம் தோட்டாக்கள் இல்லை என்ற சமிக்கையை தனது எதிர் தரப்பு படையினிடம் கூறுவர்.

அதனை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு ரெடி என்று கரையோர கடல்படை வீரர்களும் பதிலுக்கு வானத்தை நோக்கி சுடுவார்கள்.அது மட்டும் இல்லுமால் தனது கரையோரத்தில் அமைக்கப்பட்ட 7 பெரிய பீரங்கிகளின் மூலம் மூன்று மூன்று குண்டுகளாக 21 முறை விண்ணை நோக்கி சுடுவார்கள்.   அவ்வாறாக போர்க்கப்பலின் பீரங்கி மற்றும் வீரர்களின் துப்பாக்கியால் எந்த வித ஆபத்து இல்லை என்பதை இருதரப்பினரும் மேல் நோக்கி சுட்டு உறுதிப்படுத்துகின்றனர்.

அவ்வாறாக இரு தரப்பு கடல் படையினரும் சமாதானம், பேச்சுவார்த்தை மற்றும் சரணடைதல் போன்ற காரணங்களுக்காக போரை முடிவுக்கு கொண்டுவர வானை நோக்கி சுடும் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுவதால்.....இது வரலாற்றில் போர் வீரர்களுக்கு ஒரு புனித நிகழ்வாக கருதுகின்றனர்.

இந்த வழக்கத்தையே இராணுவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையாக இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடித்து வருகின்றனர்.  இன்று இந்த 21 குண்டு சம்பிரதாயத்தை பல்வேறு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றி வருகின்றன.

இந்த நடைமுறை ராணுவத்தில் இறந்த வர்களுக்கு மட்டும் கடைபிடிப்பட்டாலும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முன்நாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் போன்ற முக்கிய அரசியல் வாதிகளுக்கும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களிலும் மேலும் கலை, இலக்கியம், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளில் இச்சமூகத்தில் மக்களின் மத்தியில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இந்த ராணுவத்தினரால் நிகழ்த்தப்படும் வானில் 21 குண்டுகள் முழங்கக் கூடிய அரசு மரியாதை கடைபிடிக்கப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.