திருமணம் என்பது அனைவரின் வாழக்கையிலும் முக்கியமான திருப்பு முனையாகும். திருமணம் என்பது நமது நாட்டில் சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஏனெனில் நம் நாட்டில் திருமணத்திற்கு ஜாதி, மதம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தவிர பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை. இவை தவறானவையாக இருந்தாலும் சில நாடுகளில் இதனைவிட மோசமான பிரச்சினைகள் உள்ளன.
திருமணம் என்பது உங்கள் மனதில் உள்ள வினோதமான மரபுகள் மற்றும் சடங்குகளின் சிந்தனையைத் தூண்டினால், மற்ற நாடுகளில் அதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உங்களை பயமுறுத்தும். ஆச்சரியப்படும் விதமாக, உலகெங்கிலும் சில அபத்தமான திருமண தொடர்பான சட்டங்கள் உள்ளன சில சட்டங்கள் உங்களை அதிர்ச்சிக்கு கூட ஆளாக்கும். உலகின் சில மோசமான திருமண சட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சவூதி அரேபியா:
சுவாரஸ்யமாக, சவூதி அரேபியா தனது ஆண் குடிமக்களை பாகிஸ்தான், பங்களாதேஷ், சாட் மற்றும் மியான்மர் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய தடை விதித்துள்ளது. தனது நாட்டின் ஆண்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்வதைத் தடுக்கும் முயற்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறிப்பிட்ட நான்கு நாடுகளுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு என்று தெரியவில்லை.
அமெரிக்கா:
திருமணத்தைச் சுற்றியுள்ள வினோதமான சட்டங்கள் அமெரிக்காவில் உள்ளன. உதாரணமாக, வெர்மான்ட்டில் உள்ள பெண்கள் செயற்கை பற்களை அணிவதற்கு முன்பு தங்கள் கணவரின் அனுமதியைக் கேட்க வேண்டும். இருப்பினும், கலிபோர்னியா, கொலராடோ, டெக்சாஸ் மற்றும் மொன்டானாவில், நீங்கள் ஆயுதப்படைகளில் இருந்தால், பினாமி திருமணங்களுக்கு சட்டரீதியாக ஏற்பாடு உள்ளது. திருமண விழாவில் மணமகன் அல்லது மணமகன் மட்டுமே இருந்தால் போதும், இல்லாதவர்கள் அங்கு பினாமியாக குறிக்கப்படுகிறது. மொன்டானாவில், மணமகனும், மணமகளுமே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியதில்லை. இது இரட்டை பினாமி திருமணம் என்று அழைக்கப்படுகிறது.
பிரான்ஸ்:
மரணத்திற்குப் பிந்தைய திருமணங்களுக்கான முதல் சட்டத்தை பிரான்ஸ் இயற்றியது, இதன் மூலம் வாழ்க்கைத் துணைகளில் ஒருவர் இறந்தாலும் திருமணம் செய்யலாம். முதல் உலகப் போரில் இந்த நடைமுறை தொடங்கியது, வாரங்களுக்கு முன்னர் இறந்த வீரர்களுக்கு பினாமி மூலம் பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். எவ்வாறாயினும், 1950 களில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஒருமுறை அணை உடைந்ததால் இறந்த 400 பேரில் ஒருவரை, ஒரு பெண் அவரின் மரணத்திற்குப் பின்னும் அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
மொனாக்கோ:
மொனாக்கோவில், திருமணங்களை பொதுவில் அறிவிப்பது கட்டாயமாகும். இருப்பினும், கிரேக்கத்தைப் போல திருமணத்தை செய்தித்தாளில் அறிவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மாறாக அதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி டவுன் ஹாலின் வாசலில் ஒட்டினால் போதும். இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளை உள்ளடக்கிய 10 நாள் காலத்திற்கு இந்த அறிவிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த திருமணங்கள் செல்லாது.
ஜப்பான்:
ஜப்பான் முன்னோர்களிடம் மரியாதை செலுத்தும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது, இது ஒரு ஜப்பானிய சட்டத்தை விளக்குகிறது. இதன்படி ஒரு மூத்த சகோதரர் திருமணத்தில் தம்பியின் காதலியின் கையை முறையாக கேட்கலாம் என்று கூறுகிறது. அவர்கள் இருவரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இங்கிலாந்து:
தம்பதியினர் கூரையுடன் ஒரு 'நிலையான கட்டமைப்பில்' திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. இது உலகின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான வெளிப்புற திருமணங்களை நிராகரிக்கிறது. இங்கிலாந்தில் குறிப்பாக வேல்ஸில் திருமணங்களை புனிதப்படுத்தும் நடைமுறை கட்டிடங்களை அடிப்படையாகக் கொண்டது.
வழிபாட்டுத் தலங்கள் அல்லது ஹோட்டல்கள் அல்லது ஆடம்பரமான வீடுகள் போன்ற இடங்கள் திருமணங்களுக்கு பதிவு செய்யப்படுகிறது. வெளிப்புற திருமணங்களுக்கு இங்கிலாந்தில் அனுமதியில்லை.