மஹூவா மொய்த்ரா. அடாடாடடா! என்ன ஒரு அழகு. சுபாஷ் கய் கண்ல பட்டுருந்தா மாதுரி தீட்ஷித்துக்கு போட்டியே அவங்க தான் . அவங்க பார்லிமண்ட்ல பேசுறது புரியுதோ இல்லையோ? பார்க்கிறதுக்கு நல்லா இருக்கும். அவங்க புடவை கட்டுற ஸ்டைலுக்கும் நான் ரசிகன்.
மஹூ அழகி மட்டும் இல்ல. பொருளாதாரத்தில் புலி. அமேரிக்காவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு உலகின் 5வது பெரிய இன்வெஸ்ட்மெண்ட் பேங்கான JP Morgan Chase இல் துணை தலைவராக இருந்தவர். அதற்காக வெட்டி பெருமை எல்லாம் பேசமாட்டார்.
நம்மூர் டபுள் வாட்ச் பி.டி.ஆரை விட உயர்ந்த பதவியில் இருந்தவர். சிறு பந்தா கூட இருக்காது. பி.டி ஆர்.நான் தான் பொருளாதாரத்தை கண்டுபிடிச்சேன்னு மாதிரி பேசுவார். மஹூ இந்தியா வந்ததும் முதலில் சேர்ந்தது காங் இளைஞர் அணியில் , என்னத்த கண்டுபிடிச்சாரோ , காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
மஹூ புகழ்பெற்றது தனது பேச்சுத் திறமையால் தான். பாஜக வை காட்டமாக விமர்ச்சித்தே புகழ் பெற்று விட்டார். ராகுல் காந்தியின் பணியை அவர் செய்கிறார். நம்மூர் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் "பெரியார் வாழ்க , காளிங்கராயன் வாழ்க , உதயநிதி வாழ்க" என்று பேசி கேலிக்கு உள்ளாகும் போது , மஹூவை பார்த்தாலே பெண் சிங்கம் என்று தோன்றும். பேச்சில் அப்படி ஒரு கம்பீரம் , அனல் பறக்க பேசுவார். பாஜகவை அனைத்து கட்சிகளும் எதிர்த்து பேச பயப்படும் போது மஹூ மட்டும் துணிச்சலாக விளாசி எறிகிறார். மோடியும் அமித்ஷாவும் அப்போது வாயடைத்து நிற்பார்கள் .
ஒரு எம்.பி என்றால் தேர்தலுக்கு முன் பனைமரத்தை முகப்பில் வைத்து ஜாதி ஓட்டுக்களை வாங்கி விட்டு ஜெயித்த பின் பெரியாரை முகப்பில் வைக்கும் பச்சோந்தி தனங்கள் அவரிடம் இல்லை . மம்தா புகழ் பாடும் சொம்புவாகவும் அவர் இல்லை , நாட்டின் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வரும் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். இது போன்ற ஒரு எம்.பி தமிழகத்திற்கு ஒரு முறையும் கிடைத்ததில்லை . நம்ம தலையெழுத்து அப்படி. படித்தவர் , பெரிய பதவியில் இருந்தவர். இவரைப் போன்றவர்கள் மே.வங்கத்தின் முதல்வராக வேண்டும். ஆனால் , மம்தாவை போன்றே ஆட்சி செய்தால் உருப்படாது. மஹூ எதிர்காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் அளவிற்கு வலிமையானவராக இருப்பார்.
மே.வங்கத்தில் சரியான தலைவர் இல்லாமலே பலம் வாய்ந்த எதிர்கட்சியாக பாஜக உள்ளது.சொல்ல முடியாது மம்தா மீது வெறுப்பாகி பாஜகவில் மஹூ சேர்ந்து விட்டால் முதல்வர் அவர் தான். மஹூ புடவை கட்டுவதே ஒரு தனி அழகு தான். அவர் கட்டும் புடவைகள் அனைத்தும் எளிமையாக இருக்கும்.அவர் தேர்ந்தெடுக்கும் நிறம் , ஜாக்கெட் நிறம் பார்ப்பதற்கு நாகரீகமான தோற்றத்தை தரும். எளிமையான அழகு அவரிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் .