பாஜக வெளியிட்ட 195 வேட்பாளர்கள் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் மக்களவை சபாநாயகரும் உள்ளார். இந்த பட்டியலில் 2 முன்னாள் முதல்வர்களும் இடம்பெற்றுள்ளனர்.
28 வேட்பாளர்கள் பெண்கள். 47 பேர் 50 வயதிற்குட்பட்டவர்கள். பட்டியல் சாதியினர் 27 பேர், பழங்குடியினர் 18 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் 57 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மாநிலங்கள்
உத்தரப் பிரதேசம் (51),
மேற்கு வங்கம் (20),
மத்தியப் பிரதேசம் (24),
குஜராத் (15),
ராஜஸ்தான் (15),
கேரளா (12).
தெலுங்கானா(9),
அசாம்(11),
ஜார்கண்ட்(11),
சத்தீஸ்கர்(11),
டெல்லி(5),
ஜம்மு & காஷ்மீர்(2),
உத்தரகாண்ட்(3),
அருணாச்சல பிரதேசம்(2),
கோவா(1),
திரிபுரா( 1),
அந்தமான் நிக்கோபார்(1),
டாமன் & டையூ(1).
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் இன்று வெளியிடப்படவில்லை