ஐந்து வயதில் கர்ப்பம் லீனா மெடினா
உலகிலேயே சின்ன வயது தாய்...
அந்த பெண் பெயர் லீனா மெடினா. இவருக்கு ஐந்து வயதிருக்கும் போது வயிறு பெரிதாக வீங்கிக் கொண்டு போனது. அவரது பெற்றோர்கள் வயிற்றில் கட்டியிருப்பதாக நினைத்தனர். மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்த போது அது கட்டி இல்லை கர்ப்பம் என்று டாக்டர் கூறினார்.
அப்போதைக்கே லீனா ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று டாக்டர் கூறினார்.1939 மே 14 ல் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவள் சிறிய பெண் என்பதால் டாக்டர்கள் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தார்கள். தாய் மகளுக்கும் பெரியதாக வயது வித்தியாசம் இல்லாததால் இருவரும் சேர்ந்து விளையாடி வந்தனர்.
லீனாவின் மூன்று வயதிருக்கும் போது வயதுக்கு வந்தது என்று அவரது அம்மா கூறினார். ஆனால் அந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள தேவையான உடல் உறுப்புகள் கூட வளர்ந்திருக்காது என்று இது சாத்தியம் இல்லை என்றும் டாக்டர்கள் வாதிட்டனர். அதன் பிறகு லீனா குடும்பத்தினர் எதுவும் பேசவில்லை.
அவளின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை அவளின் தந்தையை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தகுந்த ஆதாரமில்லாமல் விடுதலை செய்தனர். லீனாவுக்கு 40 வயது இருக்கும் போது தந்தை 1979 ல் இறந்து விட்டார். ஆனால் லீனா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
அவரின் கர்ப்பத்திற்கு இன்று வரை விடை தெரியவில்லை. சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் நேர்காணலுக்கு அழைக்க லீனா மறுத்துவிட்டார். அவருக்கு வயது 85 லீமா என்னும் ஊரில் வசித்து வருகிறார்.