.
லட்சத்தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.3 வரை குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் தற்போது லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.30 குறைத்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.