பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடல் போல் வெள்ளம் பொங்கி வருவதைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கார்கள், பைக்குகளை நகர்த்த முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.