நெல்லை - எலஹங்க வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் , கோவை, மங்களூர், கொச்சுவெலி உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ரத்து
நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் எலஹங்க இடையே சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லையில் இருந்து மே 22,29 ஜூன் 5,12 ஆகிய நாட்களில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எலஹங்க சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எலஹங்கவில் மே 23,30 ஜூன் 6,13 ஆகிய நாட்களில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
1.மங்களூர் - கோவை - மங்களூர் இடையே ஜூன் 8,15,22,29 ஆகிய நாட்களில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து .
2. கேரள மாநிலம் கொச்சுவெலி - நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 7,14,21,28 ஆகிய நாட்களில் ரத்து
3. நிஜாமுதீன் - கொச்சுவெலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 1017,24 ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.
4. சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி இடையே வாரத்தில் இரு நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 21,23,28,30 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.
5. வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் இடையே வாரத்தில் இரு நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 22,24,29 ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே (மதுரை கோட்டம்) அறிவித்துள்ளது