கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்னிலையில் நடைபெற்று வரும் 'தமிழ் தெம்பு' திருவிழாவின் 2ம் நாளில் ஜமாப் நடனம், மதுரையைச் சேர்ந்த குழுவினரின் பறை இசை மற்றும் ஈரோடு ஈஷா வித்யா மாணவர்களின் அற்புதமான நடன நிகழ்ச்சி என உயிரோட்டமிக்க கலாச்சார கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
தமிழ் தெம்பு என்பது, தமிழ் கலாச்சாரத்தை உயிரோட்டமாக வைத்திருக்கச் செய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள 9 நாள் கலாச்சாரத் திருவிழாவாகும். இது மார்ச் 17 வரை நடைபெறுகிறது.
#TamilThembu #TamilNadu #Culture #Adiyogi #IshaYogaCenter