Breaking News :

Sunday, February 25
.

தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் புறப்படாது


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் புறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலை 6 -இரவு 10 வரை அதிக பேருந்தும், 1 0மணிக்கு மேல் பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்து இயக்கப்படும். செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிக்கபப்ட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை செங்கோட்டை பேருந்துகள் நடைமேடை எண் 1-ல் இருந்து புறப்படும். ராமேஸ்வரம் பேருந்துகள் 3, கடலூர் பேருந்துகள் 9, கரூர் பேருந்துகள் 4, 6ம் நடைமேடைகளில் நிறுத்தப்படும். திருச்சி, குமுளி, கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் நடைமேடை எண் 4ல் நிறுத்தப்படும். கள்ளக்குறிச்சி 8, கன்னியாகுமரி 1, 2, கும்பகோணம் 4, கோவை பேருந்துகள் 6வது நடைமேடையில் நிறுத்தப்படும். கோவை, திருப்பூர், கரூர் பேருந்துகள் நடைமேடை எண் 6ல் நிறுத்தப்படும்.

 

அரியலூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் 5, 8 ஆகிய நடைமேடைகளில் நிறுத்தப்படும். சிதம்பரம் 9, செங்கோட்டை 1, சிவகாசி 2, சேலம் 6, தஞ்சாவூர் பேருந்துகள் 4ம் எண் நடைமேடையில் நிறுத்தப்படும். திண்டுக்கல் 4, திருச்சி 4, திருச்செந்தூர் 1, 2, நெல்லை பேருந்துகள் 1, 2ஆம் எண் நடைமேடையில் நிறுத்தம். திருவண்ணாமலை 7, திருவாரூர் 5, தேனி 4, நாகர்கோவில் 1 ,2 புதுச்சேரி பேருந்துகள் 9 நடைமேடையில் நிறுத்தம். மதுரை 3, விழுப்புரம் 8, மார்த்தாண்டம் 1, 2, வேளாங்கண்ணி 5ஆம் நடைமேடையில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.