பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கேலோ இந்தியா போட்டி குவாஹாட்டியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணியினர் தொடர்ந்து 2 வது முறையாக கோப்பையையும், தங்கப் பதக்கமும் வென்று நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிக்கோப்பையுடன் வருகை தந்திருந்த நம் வீராங்கனையரை தலைமைச் செயலகத்தில் வாழ்த்தினோம். அவர்களுக்கு துணை நின்ற பல்கலைக் கழக நிர்வாகம்- பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகள்.
நம் மாணவியரின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.