கரப்பான் பூச்சியில் இருந்து பால் தயாரிக்கப்படுவது உண்மைதான். பல இடங்களில் இதை உணவுப் பொருளாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். வருங்காலத்தில் கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பால் சாதாரண பசும்பால் போல விற்பனைக்கு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
7விட்டமின் B12 மற்றும் ஊட்டச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் மிகுந்த இந்தப் பால் பவுடர் வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. பசுவின் பாலை விட நான்கு மடங்கு புரதச் சத்து அதிகம் மிகுந்த இது பசும்பால் போன்ற சுவை கொண்டது என்கிறார்கள். இதில் உள்ள சத்துக்கள் கீழே உள்ள அட்டவணைப்படி:
45% புரோட்டின்
25% கார்போஹைட்ரேட்
6% - 22% கொழுப்பு
6% அமினோ அமிலங்கள்
பசிபிக் கரப்பான் பூச்சி என்ற ஒரு வகையான கரப்பான்பூச்சிகள் முட்டையிடும் காலத்தில் வெளிர் மஞ்சள் நிறத்திலான திரவத்தை சுரக்கின்றன. இதையே கரப்பான் பூச்சி பால் என்று அழைக்கிறார்கள். இதை சேகரித்து சுத்திகரித்து பவுடராக மாற்றப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
சீனாவின் சில பகுதிகளில் கரப்பான் பூச்சிகளை பண்ணை அமைத்து வளர்த்து இந்த வகையான பால் உற்பத்தியை செய்கிறார்கள். இது பாரம்பரிய பால் பொருள் உற்பத்தியை ஒப்பிடும் பொழுது செலவு குறைவானது.
கால்நடைகள் உண்டாக்கும் கரிம வாயுக்கள் போன்று இதில் பெரிதாக எதுவும் வெளிப்படுவதில்லை. எனவே மற்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விட இது இயற்கைக்கு பாதுகாப்பானது என்றும் சொல்லப்படுகிறது. வரும் காலத்தில் கரப்பான் பூச்சி பால் இப்பொழுது கிடைக்கக்கூடிய கால்நடை பால் பொருட்களை மாற்றாக இருக்குமா, எந்த அளவிற்கு இருக்கும் என்று விஞ்ஞானிகள் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் விரைவில் கரப்பான் பூச்சி பால் பவுடர் எல்லா இடங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.
ஏற்கனவே ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காலை உணவாக பூச்சிகளை சாப்பிடுவதாக சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நம்மூர் ஆவின் போல 'க"வின் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. "க,-மில்க் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" என்று விளம்பரங்கள் வந்தாலும் வரலாம். கரப்பான் பூச்சி வளர்ப்பு என்று ஈமு கோழி பிசினசிஸ் ஈடுபட்டவர்கள் மீண்டும் கடையை திறக்கலாம்.