வந்தாரை வாழ வைக்கும் கவின்மிகு
காரைக்காலில் நல்லடக்கம் ஆகியிருக்கும் இறைநேசச் செல்வரே மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள்! துருக்கியில் தோன்றி இறைநாட்டம் கொண்டு காரைக்கால் வந்தடைந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் இங்கே 21 ஆண்டுகள் தங்கியிருந்து மக்கள் குறைகளைப் போக்கியும், அவர்களை நல்வழிப்படுத்தியும் நற்றொண்டு
புரிந்தார்கள்.
அந்த மகானின் 201 ஆம் ஆண்டு கந்தூரி விழா 20/02/2024 இன்று
கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது.
சாதி சமய வேறுபாடு இன்றி எல்லாராலும் நேசிக்கப்படும் அந்த மகானின் அருளாசி இறையருளோடு நம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுவோமாக!