தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு, கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையுடன் ரொக்க தொகையை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கி வாழ்த்தினர். பெண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்ட்.மேரி அணி முதல் பரிசை வென்றது,அவர்களுக்கு கோப்பையுடன் 50,000 ரொக்க தொகை, கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாம் பரிசை வென்றது,அவர்களுக்கு கோப்பையுடன் 30,000 ரொக்க தொகை, ஓட்டப்பிடாரம் அணி மூன்றாம் பரிசை வென்றது,அவர்களுக்கு கோப்பையுடன் 20,000 ரொக்க தொகை, புன்னைக்காயல் செயின்ட்.ஜோசப் அணி நான்காம் பரிசை வென்றது,அவர்களுக்கு கோப்பையுடன் 20,000 ரொக்க தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் A.D.K.ஜெயசீலன், கபடி வீரர் மனத்தி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.