டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவியின் கார், திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா. இவரது பெயரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 19ம் தேதி இந்த காரை, ஓட்டுநர் ஜோகிந்தர் சிங் சர்வீஸ் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
தனது வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு, பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது அந்த கார் மாயமாகி இருந்தது. உடனடியாக இது தொடர்பாக டெல்லி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் போலீஸார் காரைத் தேடி வருகின்றனர்.