சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படுது.
நிறுவனம் துவங்கி இன்று 10வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் அனைத்து ஏற்ற இறக்கத்திலும் தன்னோடு பயணித்து கம்பெனியின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை சுரேஷ் சம்பந்தம் பரிசாக வழங்கினார். குடும்பத்தோடு வந்து காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.