தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள நல்ல முயற்சிகளில் ஒன்று பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு 2024.
சென்னை நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கியது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் வழக்கம்போல், தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்து துவக்கவுரை நிகழ்த்தினார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்த மாநாடு எதிர்நோக்குகிறது. இன்றும் (பிப்ரவர் 9) நாளையும் (10ம்தேதி) நடைபெறும் குழு கலந்தாய்வு, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு ஆகியவற்றுடன், மாநாடு நிறைவடைகிறது. உலகமெங்கும் தமிழ் அறிஞர்கள், அறிவியலாளர்கள், கணினியாளர்கள் கூடி இருக்கிறார்கள்.
பொதுமக்கள் பார்வையிட்டு தெளிவு பெறுவதற்காக ஏராளமான நிறுவனங்கள், கண்காட்சி அரங்குகளை அமைத்திருக்கிறார்கள். நீங்கள், உங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து அரங்குகளைப் பார்வையிடலாம்.!