ஆசிரிய தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் – 2024ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய காடசி தேதி 15.03.2024 லிருந்து 20.03.2024 மலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் (Edit Option) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியத்தின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 2103.2004 முதல் 23.03.2024 மலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது