Breaking News :

Tuesday, February 11
.

சொந்த விளம்பரத்தால் சூனியம் வைத்துக் கொண்ட நிறுவனங்கள்?


பல நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்களுடைய விற்பனையை உயர்த்தி கொள்கின்றன. சில சமயங்களில் நுகர்வோருக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்தும் சில நேரங்களில் வித்தியாசமான முறையில் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். அவ்வாறு வித்தியாசமான முறையில் தங்களது உற்பத்தியை விளம்பரப்படுத்த எண்ணி விபரீதமான பிரச்சினைகளை சந்தித்த சில நிறுவனங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

வால்க்கர் சிப்ஸ் (Walker chips):

வால்க்கர் எனும் சிற்றுண்டி தயாரிக்கும் நிறுவனமானது இங்கிலாந்தில் தனது விற்பனையை விரிவுபடுத்த எண்ணி வித்தியாசமான ஒரு போட்டியையும் அதற்கான பரிசுத் தொகையையும் அறிவித்தது. தனது நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கினால் போதும் அந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். எத்தனை பாக்கெட் வாங்குகிறார்களோ அத்தனை வாய்ப்புகள் போட்டியில் கிடைக்கும். போட்டி என்னவென்றால் இங்கிலாந்தில் எங்கு மழை பொழியும் என வரைபடத்தில் கணிக்க வேண்டும். சரியாக கணித்தவர்களுக்கு 10 பவுன்ட் பரிசாக வழங்கப்படும். இதில் என்ன தவறு நடந்தது என்றால் ஒரு சிப்ஸ் பாக்கெட்டின் விலை 0.4 பவுண்ட் தான்.

ஆனால், பரிசு என்னவோ 10 பவுண்டுகள். இப்போது போட்டியாளர்கள் பத்து பாக்கெட் வாங்குகிறார்கள் என்றால் செலவு 4 பவுண்டுகள் தான். ஆனால் பத்து வாய்ப்பில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் 10 பவுண்டுகள் பரிசாக கிடைக்கும். இந்த வகையில் பல வாடிக்கையாளர்கள் சரியாக கணித்ததால் நிறுவனத்திற்கு 6 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டம் இந்திய மதிப்பில் 60 கோடியைத் தாண்டும்.

பலூன் திருவிழா(Balloon Festival):

1986-ல் யுனைட்டட் வே என்ற தொண்டு நிறுவனம் தனது விளம்பரத்திற்காக அமெரிக்காவின் கிளீவ்லாந்து என்ற இடத்தில் 15 லட்சம் பலூன்களை ஒன்றாக பறக்க விட்டது. மொத்த பலூன்களையும் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் காற்றை நிரப்பி தயார் செய்தது. திட்டம் என்னவோ முதலில் நன்றாக தான் செயல்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு பலூன்களில் உள்ள காற்று குறைந்து பலூன்கள் எல்லாம் கீழே விழ ஆரம்பித்தன.

இதில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும், குளத்தில் மாட்டிக் கொண்ட இரண்டு மீனவர்களைப் இந்த பலூன்கள் மறைத்துக் கொண்டதால் காப்பாற்ற முடியாமல் அவர்கள் இறந்து போனார்கள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் யுனைடெட் வே நிறுவனத்தின் மீது பல வழக்குகளை தொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியில் குப்பைகளை சுத்தம் செய்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு என பெரும் மதிப்பை இந்த நிறுவனம் செலவிட நேர்ந்து விளம்பர முயற்சி தோற்றுப்போனது.

மேக்டோனல்டுவின் ஒலிம்பிக் பரிசு (Mcdonald’s olympic reward):

சில ஐபிஎல் போட்டிகளின்போது நெட்வொர்க் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு ரன்களுக்கு மேல் எடுத்தால் அதற்கு மேல் அடிக்கும் ஒவ்வொரு பாலுக்கும் ஒவ்வொரு ரூபாய் டாக்டைம் என விளம்பரம் செய்கின்றனர். அதுபோல 1984-ஆம் ஆண்டில் மெக்டோனல்ஸ் நிறுவனமானது அந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் ஒவ்வொரு பதக்கத்திற்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளை அறிவித்தது.

அதாவது பரிசு என்னவென்றால் தங்கத்திற்கு பெரிய பர்கரும், வெள்ளிப் பதக்கத்திற்க்கு ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்ம், வெங்கலப் பதக்கத்திற்கு கொக்கோ கோலாவும் பரிசாக அறிவித்தது. ஆனால், மெக்டான்லின் கெட்ட நேரம் அமெரிக்காவில் பெரும் போட்டியாக இருந்த ரஷ்யா அந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா மிக எளிமையாக 83 தங்கம், 61 வெள்ளி, 30 வெண்கலம் என 174 பதக்கங்களை அள்ளியது எனவே மேக்டோனல் நிறுவனம் பல கோடிகளை நஷ்டமாக சந்தித்தது.

எனர்ஜிசர் ( Energizer):

எனர்ஜிசர் என்ற பேட்டரி நிறுவனம் பெரும் தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டது. அதில் முயலைப் பயன்படுத்தி விளம்பரம் படுத்தி இருந்தார்கள். ஆனால், டியுரோ செல் ஆரம்ப காலத்தில் இருந்தே முயலை வைத்து விளம்பரம் செய்து கொண்டிருந்ததால் மக்கள் எனர்ஜிசர் விளம்பரத்தை டியூரோ செல் விளம்பரம் என எண்ணி அந்த நிறுவனம் பேட்டரியை அதிகமாக வாங்கி பயன்படுத்த தொடங்கினார்கள்.

இதில் எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல் டியூரோ செல்லின் விற்பனை பல மடங்கு உயர்ந்துவிட்டது. எனர்ஜிசரின் விளம்பர செலவு நஷ்டக் கணக்கில் சேர்ந்து விட்டது.

பெப்சி (Pepsi):

1992 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் விளம்பரப்படுத்தும் எண்ணத்தில் தனது குளிர்பானத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாட்டிலின் மூடியில் சில எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு பரிசு தொகையை நிர்ணயித்து, அதில் 349 என்ற எண்ணிற்கு 40 ஆயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது. 349 என்ற எண்ணில் ஒரே ஒரு மூடியை மட்டும் தயாரிக்க திட்டமிட்டிருந்த்து பெப்சி நிறுவனம். ஆனால் பெப்சி நிறுவனத்திற்கு மூடி தயாரிக்கும் நிறுவனம் தவறுதலாக 8 லட்சம் மூடிகளை அந்த என்னோடு தயாரித்து விட்டது.

பெப்ஸி நிறுவனமும் விற்பனைக்கு அனுப்பி விட்டது. இந்த 349 என்ற எண் கிடைத்த பல வாடிக்கையாளர்கள் தங்கள் பரிசுத்தொகையை கேட்டபோது இவ்வளவு மூடிகள் எப்படி வந்தது என குழம்பிய நிறுவனம் பரிசு தொகையை தர மறுத்தது. இதனால் கோபம் அடைந்த அவர்கள் சுமார் 6,189 குற்றவழக்குகளையும் அதில் 5,200 மோசடி வழக்குகளையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அவ்வளவு நபர்களுக்கும் 40 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையாக கொடுத்தால் 5,500 கோடி டாலருக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என்பதால் பரிசை தர இயலாது என பெப்சி நிறுவனம் மறுத்தது. இறுதியில் நீதிமன்றம் ஒவ்வொரு மூடிக்கும் 2,000 டாலர் பரிசுத் தொகை வழங்கியே ஆகவேண்டும் என தீர்ப்பளித்தது. இதில் இந்திய மதிப்பில் பெப்சி நிறுவனம் 60 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.