Breaking News :

Friday, October 04
.

இந்தியாவின் முதல் ரயிலோட்டம் எங்கு எப்படி?


இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், ஒரு நாளைக்கு 14,444 பயணிகள் ரயிலையும் இயக்கும் பிரமாண்ட சாம்ராஜ்யம்.  இந்த சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர் ரோலண்ட் மெக்டொனால்ட் ஸ்டீவன்சன் என்ற பிரிட்டிஷ் பொறியாளர். 1808-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி லண்டனில் பிறந்தவர். 1843-ல் குடும்பத்தோடு இந்தியா வந்தார்.

இந்தியாவில் ரயிலை இயங்க வைக்கவேண்டும் என்பது அவரின் தீவீர கனவு.
அதோடு அன்றைக்கு ரயில்வே துறை தனியார் வசமே இருந்தது. இந்தியா போன்ற கரடுமுரடான நில அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் ரயிலுக்காக முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? இப்படி சிக்கல்கள் பல இருந்தாலும் தனது கனவில் தீவிரமாக இருந்தார் ஸ்டீவன்சன்.

அதற்கு ஏற்றாற் போல் 'தி இங்கிலீஸ்மேன்' என்ற ஆங்கில நாளிதழில் அவருக்கு ஆசிரியராக பொறுப்பு கிடைத்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார்.

ரயில்களைப் பற்றிய விதவிதமான கட்டுரைகளை தினமும் எழுதினார். இந்திய ரயில்வேயில் முதலீடு செய்வதால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது போன்ற கட்டுரைகள் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியா பக்கம் இழுத்தது. இந்தக் கட்டுரைகளை இங்கிலாந்து நாளிதழ்களிலும் வரும்படி செய்தார்.

இதன் விளைவாக 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர்.
 
 ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல.

 வேறு யாரவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு ஓடிப்போயிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனசோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக் காட்டியவர் ஸ்டீவன்சன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.